அரசின் இழுத்தடிப்பால் பாதிப்படைந்த லட்சக்கணக்கான மக்கள்!

அரச வேலைத்திட்டங்களுக்காக நிர்மாணவியல் துறைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை அரசாங்கம் செலுத்த தவறியதாக இலங்கை தேசிய நிர்மாணவியல் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஒரு வருடக் காலத்திற்கு செலுத்த வேண்டிய 150 பில்லியன் ரூபா தொகையை அரசாங்கம் செலுத்தாது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதி தாமதம்

மேலும், குறித்த நிதி தாமதத்தினால் 4000 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 100 பாரிய நிறுவனங்கள் என்பன பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களது தொழில் வாய்ப்பினை இழக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற ஒப்பந்தங்கள்

வரவு செலவு திட்டத்தில் ஒரு வருடத்திற்கு ஓதுக்கப்படும் நிதியை விட அரச அதிகரிகள் தேவையற்ற ஒப்பந்தங்களுக்கு அதிக நிதியை செலவிட்டமையே இதற்கு காரணம் எனவும் சுசந்த லியனாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

-ibc