ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு – அரசாங்கம் அறிவிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளதாக உணவு, கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனத்தின் 51 வீத பெரும்பான்மை பங்குகள் அரசாங்கத்திடம் தக்கவைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்தக் கடன் 1.126 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தந்த நிறுவனங்களின் ஊழியர்களின் வேலைவாய்ப்பு உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் பங்கு விற்பனை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பது தொடர்பில் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கடனில் இருந்து விடுபட முடியும்

“தற்போது ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் லாபம் ஈட்டுகிறது. எனவே, நாங்கள் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன பங்குகள் மற்றும் அதன் நிர்வாகத்தில் 51 சதவீததை நாம் வைத்துக்கொண்டு, முதலீட்டாளரும் ஏனைய 49 சதவீததை வழங்கவுள்ளோம்.

அதிகமாகக் கேட்டால், அந்த முதலீட்டாளர்களின் தேவைக்கேற்ப அதிக அல்லது சில தொகையைப் வழங்கவும் தீர்மானித்துள்ளோம். அதனால் இதற்கு தேவையான விலைமனுக்கள் கோர எதிர்பார்க்கிறோம்.

இதிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடனை செலுத்தி, முடிந்தவரை கடனில் இருந்து விடுபட முடியும் என நம்புகிறோம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கோவிட் வைரஸ் தொற்று காரணமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலும் நஷ்டத்தை சந்தித்தது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக உலகளவில் கடந்த ஆண்டு விமானத் துறையின் திறன் சுமார் 60 வீதம் முதல் 80 வீதம் வரை குறைந்துள்ளது.

37 இடங்களுக்கு சேவைகள் முன்னெடுப்பு

2020/21 நிதியாண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 70 வீதம் வருவாய் குறைப்பை அனுபவித்ததாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 2010 இல் சேவையில் இணைக்கப்பட்டது. அதன் பெரும்பாலான பங்குகள் அதன் தொடக்கத்தில் இருந்து அரசாங்கத்தின் வசம் உள்ளது. 2010ம் ஆண்டிலிருந்து, நிறுவனம் மிகவும் நஷ்டமடையச் செய்யும் வணிகமாக மாறியுள்ளது.

மேலும் 2022 ஜனவரி-மார்ச் வரையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மிகக் குறைந்த செயல்பாட்டு லாபத்தைக் காட்டியுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலங்கையிலிருந்து 23 நாடுகளை உள்ளடக்கிய 37 இடங்களுக்கு சேவைகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு நேரடி விமான சேவைகளைக் கொண்ட ஒரே விமான சேவையாகும்.

 

 

-tw