அதிபர் ரணில் விக்ரமசிங்க தனக்கு ஆதரவாக வாக்களித்த 134 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு நிலையான அரசாங்கத்தை உருவாக்குவார் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்றைய ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
யோசனைகளை முன்வைத்த கட்சிகள் கூட இன்று இணங்கவில்லை
தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” அதிபர் இப்போது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரவணைக்க தேவையில்லை.
அதற்குப் பதிலாக தனக்கு வாக்களித்த 134 உறுப்பினர்களை கொண்டு நிலையான அரசாங்கத்தை உருவாக்கி அவர்களில் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கவேண்டும்.
சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு யோசனைகளை முன்வைத்த கட்சிகள் கூட இன்று அதற்கு இணங்கவில்லை.
எனவே தமக்கு வாக்களித்த 134 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பலமான அரசாங்கத்தை அதிபர் நியமித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் ” எனக் குறிப்பிட்டார்.
-ibc