இலங்கையின் கடன் சுமையை தீர்க்க சர்வதேச நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கும் சீனா

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரரான சீனா,பாரம்பரிய நட்பு அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை தீர்க்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச நிதி நிறுவனங்களை ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய சிரமங்கள் மற்றும் கடன் சுமையை குறைக்கும் முயற்சிகளை தாம் ஊக்குவித்து வருவதாக சீன தூதரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சர்வதேச கடன் கொடுப்பனவு

2022 ஏப்ரலில் சர்வதேச கடன் கொடுப்பனவுகளை நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த சிறிது நேரத்திலேயே, சீன நிதி நிறுவனங்கள் இலங்கை தரப்பை அணுகி முதிர்ச்சியடைந்த கடன்களைக் கையாள சரியான வழியைக் கண்டறிய உடன்பட்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவுடன் இலங்கையும் இதேபோன்ற உணர்வுடன் தீவிரமாகச் செயற்பட்டு, சாத்தியமான தீர்வை விரைவாகச் செய்யும் என நம்புவதாக சீனாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

-tw