திருடர்களே பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதால் திருடர்களை பிடிப்பது நடக்காத காரியம்!

நாட்டின் திருடர்களை பிடிக்கும் பொறுப்பை திருடர்களே ஏற்றுக்கொண்டுள்ளதால், ஒருபோதும் திருடர்கள் பிடிக்கப்படுவது நடக்காது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய போதிராஜ தர்ம நிறுவனத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“நாட்டின் அரசியல்வாதிகள் திருடியதை கண்டுபிடிக்க சர்வதேச ஆணைக்குழு நியமிக்க வேண்டும். இந்த அரசியல் கொள்கைகளை நிறுத்துவதற்கு சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதிகாரத்தால் பாதுகாக்கப்படும் திருடர்கள்

திருடர்களை பிடிக்கவே மக்கள் தலைவர்களை தெரிவு செய்கின்றனர். எனினும் தற்போது அதிகாரத்தை பெற்றுக்கொண்டு திருடர்களை பாதுகாக்கின்றனர். இவர்களில் எவர் மூலமும் தேசிய பொறுப்பு நிறைவேற்றப்பட மாட்டாது.

ஆகவே, கொள்ளையிடப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதே வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகையை ஈடுசெய்வதற்கான பொருத்தமான செயல்” என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

 

 

-mm