இலங்கையால் தருவிக்கப்பட்ட எட்டு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் வரும் மாதத்தில் காலாவதியாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு தடுப்பூசியும் 10-15 அமெரிக்க டொலர்கள் என்ற பெறுமதியில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தளவு அதிகப்படியான அளவு இறக்குமதிக்கு யார் ஒப்புதல் அளித்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசிகளை பெறாத மக்கள்
அடுத்த மாதத்திற்கு முன்னர் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவது சாத்தியமற்றது என்று சுட்டிக்காட்டிய அவர், மருந்தளவு பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறதா என்றும் வினவியுள்ளார்.
எனினும் இதற்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, தேவைப்படும் சனத்தொகையை கணக்கிட்ட பின்னரே தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், பெரும்பாலான மக்கள் மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசிகளை பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
-tw