அமைதியான போராட்டத்திற்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நியூசிலாந்து கோரிக்கை

கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டத்திற்கான முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கையை நியூசிலாந்து வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் நியூசிலாந்து தூதுக்குழு, 2022 முதல் பாதியில் பெரிய அளவிலான போராட்டங்களுக்கு அதிகாரிகளின் அமைதியான பதிலை சுட்டிக்காட்டியது.

எனினும், பின்னர் வந்த காலத்தில், எதிர்ப்பாளர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் அண்மைக்கால கடினத்தன்மை குறித்து தாம் கவலையடைவதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

அமைதியான போராட்டத்திற்கு முழுப்பாதுகாப்பு

இந்த நிலையில் கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டத்திற்கான முழுப்பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கையை நியூசிலாந்து வலியுறுத்துவதாக நியூசிலாந்தின் நிரந்தரப்பிரதிநிதி லூசி டங்கன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை நடைமுறைப்படுத்தாமல்,மனித உரிமைக் கடமைகளுடன் இணங்கும் புதிய சட்டத்தை கொண்டு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் நியூசிலாந்து கேட்டுள்ளது.

அமைதி மற்றும் செழிப்பை நிலைநிறுத்துவதற்கு பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் முக்கியமானவை.

இந்த நிலையில் மனித உரிமை மீறல்கள் உட்பட உள்நாட்டு பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் மற்றும் ஏனைய பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுமாறு நியூசிலாந்து தூதுக்குழு இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

 

-tw