உண்ண உணவின்றி தவிக்கும் மக்கள் – இங்கிலாந்து செல்லும் ரணில் -ஹிருணிகா விமர்சனம்

நாட்டு மக்கள் உண்ண உணவின்றி கடும் அவலநிலையில் இருக்கும் போது, நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, மகாராணியின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்க இங்கிலாந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் இரங்கல் அறிக்கையை வெளியிட்டால் போதும் என்றும், இறுதி அஞ்சலி செலுத்த ரணில் இங்கிலாந்துக்கு வருகிறாரா இல்லையா என்பது அந்நாட்டு மக்களுக்கு கவலையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மகாராணியின் இறுதிச் சடங்கில்

முன்னதாக காலமான எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ரணில் விக்ரமசிங்க இங்கிலாந்து செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

-ibc