கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹசான் அலியின் அரசியல் எதிர்காலத்திற்கு இன்னும் இடம் உண்டு என்று சிலாங்கூர் மாநில துணை ஆணையர் காலிட் சமாட் கூறினார்.
இதனால், ஹசான் ஏமாற்றத்தின் காரணமாக தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கக்கூடாது.
“அவர் ஏமாற்றம் அடைந்திருக்கலாம் (மீண்டும் போட்டியிட தேர்வு செய்யப்படாததால்) என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால், அவர் தன்னையே அழித்துக்கொள்ளும் பாதையில் செல்லக்கூடாது.
“நாங்கள் அவரை தாக்க முயற்சிக்கவில்லை, அவரை பாதுகாக்க விரும்புகிறோம்”, என்று இன்று காலையில் ஷா அலாமில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் காலிட் கூறினார்.