ஊழல் மோசடியில் ஈடுபட்டால் வாரண்ட் இன்றி கைது!! இலங்கை அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

ஊழலில் ஈடுபடும் எவரையும் பிடி ஆணை இன்றி கைது செய்வதற்கு தேவையான விதிமுறைகளை உருவாக்க அரசு தயாராகி வருகிறது.

முன்மொழியப்பட்டுள்ள புதிய ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் கீழ் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கைது செய்யும் அதிகாரிகள் 24 மணி நேரமும் காவலில் வைக்க முடியும்.

இதேவேளை, இலங்கைக்கு வெளியில் இருந்து ஊழலில் ஈடுபட்டமைக்கான போதிய சாட்சியங்களை வைத்திருக்கும் நபர்களை கைது செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் தொடர்பான 108 பக்கங்களைக் கொண்ட ஊழல் தடுப்புச் சட்டம், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதுடன், ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கையை ஆணைக்குழு மேற்கொள்ளும்.

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த தகவல்களை ஆணையம் பெற முடியும். எந்தவொரு மின்னணு தரவுத் தொகுப்பையும் அணுகுவதற்கான உரிமையை ஆணையம் கொண்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ், அரச அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியிலும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்த வேண்டும்.

 

 

 

-ift