ரணிலை விரட்டியடிக்கும் திட்டத்தில் களமிறங்கியுள்ள குழு!

சிறிலங்கா அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைப்பது தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தோற்கடிப்பது தொடர்பான ஆலோசனையில் சில கட்சிகளின் தலைவர்கள் விவாதங்களை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சிக்கு சென்ற டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவினரே இந்த வட்டமேசை கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வட்ட மேசை விவாதம்

நாடாளுமன்றத்தில் 16 கட்சிகளைச் சேர்ந்த 99 நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குழு கூடி வட்டமேசை விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த வட்ட மேசை விவாதத்தின் போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தோற்கடிக்க அனைவரும் ஏகமனதாக இணங்கியதாக கலந்துரையாடலில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

 

 

-ibc