இலங்கையை காப்பாற்ற வரும் சீன கப்பல்

சீனாவில் இருந்து டீசல் கப்பல் ஒன்று இந்த மாத இறுதியில் நாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் இடம்பெறும் வலுசக்தி மாநாடு ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர், அமைச்சரிடம், இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகளை முகங்கொடுக்க ஏதேனும் சலுகைகள் கிடைக்கப்பெற்றுள்ளதா என செய்தியாளர்கள் வினவினர்.

அதற்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கை கடந்த 10 மாதங்களில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தது.

இதனால், வலுசக்தி துறை பாரிய வீழ்ச்சியையும் நெருக்கடியையும் சந்தித்திருந்தது. அதனூடாக வாய்ப்புகள் உருவானதாகவும், தனியார் விநியோகத்தர்கள் இந்ததுறைக்கு வருவதற்கான சட்டம் மற்றும் கொள்கைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்.

அதேநேரம், 2030ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 70 சதவீதம் வரையில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 

 

-ift