சுயாதீன வரவு செலவு அலுவலகம் அவசியமானது: ஹர்ஷ டி சில்வா

பொது நிதி, செலவுகள் மற்றும் கடன்களை முறையாக நிர்வகிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் ஒரு சுயாதீன வரவு செலவு அலுவலகம் அவசியமானது, எனவே தேவையான சட்ட அதிகாரத்துடன் ஒரு வருடத்தில் அதனை நிறுவப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் தலைமையில் நாடாளுமன்றத்தில் இடைக்கால அடிப்படையில் செயலகம் ஒன்று அமைக்கப்படும்.

நல்லாட்சி அரசாங்கம்

தமது தலைமையிலான பொது நிதிக்குழு நடைமுறையில் இருக்கும்போது வேறு உப குழுக்கள் அவசியமில்லை.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே, நல்லாட்சி அரசாங்கத்தின் போது சுயாதீன வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவ வேண்டும்.

இந்த நிலையில் அந்த அலுவலகத்தின் முக்கிய செயல்பாடு பொது நிதி, செலவுகள் மற்றும் கடன்கள் தொடர்பாக பகுப்பாய்வு, மதிப்பீடு மற்றும் பரிந்துரைகளை வழங்குவதாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அமைப்பின் மூலம் பொது நிதி பற்றிய முழுமையான பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு வழங்கப்படும்.

பிரதான வரிச்சலுகைகள்

அத்துடன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சட்டமூலங்கள், குறிப்பாக நிதிச் சட்டமூலம் பற்றி விவாதம் செய்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

2021ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் சீனி இறக்குமதிக்கான பிரதான வரிச்சலுகை வழங்கப்பட்டு வரிக் குறைப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, நாடாளுமன்றம், மத்திய வங்கி அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதனை அறிந்திருக்கவில்லை.

இது, இறுதியில் அரசுக்கு பாரிய வருவாய் இழப்புக்கு வழிவகுத்தது. வரவு செலவுத் திட்ட அலுவலகம் இருந்திருந்தால் இது நடந்திருக்காது என தெரிவித்துள்ளார்.

 

 

 

-tw