ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சிரேஸ்ட தலைவர்களின் சொத்துக்கள்
சிரேஸ்ட தலைவர்கள் தங்களது சொத்துக்கள் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டால் அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட ஏனையவர்களும் சொத்து விபரங்களை வெளியிட நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு செய்தால் நாட்டில் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து விபரங்களை வெளியிடக் கூடிய சட்டங்கள் விரைவில் உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சொத்து விபரங்களை வெளியிட்டுள்ள மகிந்த
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு சொத்து விபரங்களை வெளியிடுவது மட்டுமன்றி அதனை பகிரங்கப்படுத்தவும் வேண்டும் என எரான் விக்ரமரட்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
-tw