வடகொரிய ஏவுகணைச் சோதனை – அவசரக் கூட்டம் நடத்திய அமெரிக்கத் துணையதிபரும் பசிபிக் வட்டாரத் தலைவர்களும்

APEC கூட்டத்தில் முன்னதாக, அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸும் (Kamala Harris) ஏனைய பசிபிக் வட்டாரத் தலைவர்களும் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

அதில் அவர்கள், வடகொரியா நடத்திய ஆக அண்மைப் புவியீர்ப்பு ஏவுகணைச் சோதனைக்குக் கண்டனம் தெரிவிக்க இணங்கினர். APEC உச்சநிலைக் கூட்டம் தொடங்கிய சில மணிநேரத்தில், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைப் வடகொரியா பாய்ச்சியது.

ஜப்பானியக் கடல் பகுதிக்கு அருகே அந்த ஏவுகணை விழுந்தது. உச்சநிலைக் கூட்டத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த ஏனைய நிகழ்ச்சிகளை அந்த விவகாரம் பாதித்தது.

இன்று சோதிக்கப்பட்ட ஏவுகணையால், அணுவாயுதங்களை ஏந்திச் சென்று அமெரிக்காவைத் தாக்கமுடியும். இந்த மாதத்தில் வடகொரியா நடத்தியிருக்கும் 2ஆவது ஆகப் பெரிய ஏவுகணைச் சோதனை இது. வடகொரியாவின் செயலை வன்மையாய்க் கண்டிப்பதாகத் திருவாட்டி ஹாரிஸ் தெரிவித்தார். அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்தோ-பசிபிக் கூட்டணி நாடுகளைப் பாதுகாக்கும் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்துவதாக அவர் சொன்னார்.

 

 

 

-smc