இலங்கையில் 50,000 சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு

இலங்கையில் குறைந்தது 50,000 சிறுவர்கள் ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெப் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தகவலை, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான தொழில் வல்லுநர் மன்றத்தின் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

யுனிசெப் அறிக்கை

மேலும் 2.2 மில்லியன் குழந்தைகள் உணவுப் பாதுகாப்பின்மை தொடர்பான பிரச்சினைகளால் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காக ஒதுகுகின்றன.

இதன் காரணமாக அந்த குடும்பங்களால் மருத்துவம், கல்வி மற்றும் சுகாதார செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை என்றும் சஞ்சீவ கூறியுள்ளார்.

 

 

-tw