பலவந்தம் காரணமாக இடம்பெயர்ந்த மியன்மார் பிரஜைகளான ரோஹிங்கியாக்களை மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள பூர்வீக நிலங்களுக்கு நிலையான, பாதுகாப்பான மற்றும் தன்னார்வத்துடன் திருப்பி அனுப்புவதற்கு இலங்கையின் ஆதரவை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா கோரியுள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை தனது உத்தியோகபூர்வ இல்லமான கணபனில் சந்தித்தபோது, பங்களாதேஷ் பிரதமர் இந்த ஆதரவை நாடியதாக பங்களாதேஷ் பிரதமரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான உறவைப் பயன்படுத்தி இந்த உதவி கோரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மியான்மரில் இருந்து பலவந்தம் காரணமாக இடம்பெயர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் நீண்டகாலமாக பங்களாதேஷ் தங்கியிருப்பது, முழு பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சமூக பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று ஹசீனா சுட்டிக்காட்டியுள்ளார்.
அலி சப்ரி 2022 நவம்பர் 23-26 வரை இந்தியப் பெருங்கடல் ரிம் எசோசியேஷனின் 22வது அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் சென்றுள்ளார்
-tw

























