இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்கும் சீனா

இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

இலங்கை எதிர்நோக்கி வரும் கடன் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து பூரண புரிதல் உண்டு என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சு ஊடகப் பேச்சாளர் ஸாவோ லிஜியான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சமூகப் பொருளாதார அபிவிருத்தி

கடன் மீளச் செலுத்துகை தொடர்பில் உரிய நடவடிக்களை எடுப்பதற்கு உதவிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் இயலுமைக்கு ஏற்ற வகையில் இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு உதவிகளை வழங்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

இறப்பர், அரிசி உடன்படிக்கை

இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர், அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மரபு ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

-ibc