போதை கலந்த இனிப்புகள் பெருமளவில் மீட்பு – மாணவர்கள் இலக்கு

போதைப்பொருள் அடங்கிய 40,000 இனிப்பு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இவை சிறுவர்களுக்கு விற்க தயாராக வைத்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பெற்றோர் முறையீடு

பாணந்துறையில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றிற்கு முன்பாக உள்ள கடையொன்றில் இவை விற்பனை செய்யப்படுவதாகவும், புறநகர் பாடசாலை மாணவர்களின் பெற்றோரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பாணந்துறை வடக்கு காவல்துறையினர் குறித்த கடையை சுற்றிவளைத்துள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த கடையில் 40 ஆயிரம் போதை கலந்த இனிப்புகள் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

 

 

-ibc