நச்சுத்தன்மை உள்ள இருமல் மருந்து… இந்தோனேசிய அரசாங்கம் மீது வழக்கு

இந்தோனேசியாவில் நச்சுப்பொருள் இருந்த இருமல் மருந்தை உட்கொண்டு மாண்டோர் அல்லது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் சில, நாட்டின் அரசாங்கத்தின் மீதும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீதும் வழக்குத் தொடுத்துள்ளன.

Class action எனப்படும் கூட்டு வழக்கான அது, இந்தோனேசியச் சுகாதார அமைச்சு, நாட்டின் உணவு, மருந்து அமைப்பு, நச்சுத்தன்மை கொண்ட இருமல் மருந்துகளை விற்ற 7 நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 199 பேர் சிறுநீரகக் கோளாற்றினால் மாண்டனர். நச்சுப்பொருள் இருக்கும் மருந்துகள் விற்கப்படுவதும் உட்கொள்ளப்படுவதும் தடுக்கப்படவில்லை என்பதால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர்; சிலர் மாண்டனர்.

அதன் தொடர்பில் வழக்குத் தொடுக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சட்டப் பிரதிநிதி குறிப்பிட்டார். சூழ்நிலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும் அது வருத்தமளிக்கிறது என்றும் அவர் சொன்னார்.

அந்தக் கூட்டு வழக்கில் 12 குடும்பங்களை 2 குடும்பங்கள் பிரதிநிதிக்கின்றன. மேலும் சில குடும்பங்கள் அதில் சேரக்கூடும் என்று நம்பப்படுகிறது.

 

 

 

-smc