இலங்கையில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை! ஜப்பான் வழங்கியுள்ள பணம்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக எம்ஏஜி என்ற சுரங்க ஆலோசனைக் குழுவிற்கு ஜப்பான் அரசாங்கம் மொத்தமாக 648,148 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

ஜப்பானின் தூதர் ஹிடேக்கி மிசுகோஷி மற்றும் எம்ஏஜியின் இலங்கைக்கான இயக்குநர் கிறிஸ்டி மெக்லெனன் ஆகியோர் இதற்கான உடன்படிக்கையில் கடந்த 30 நவம்பர் 2022 அன்று கையெழுத்திட்டதாக ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது, ஜப்பானிய உதவியின் மூலம் செயல்படுத்தப்படும், 14ஆவது கண்ணிவெடி அகற்றும் திட்டமாகும்.

கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட நிலம்

முந்தைய 13 திட்டங்களின்கீழ் 15,831 கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிகுண்டுகளை அகற்றப்பட்டு, 2,965,949 சதுர மீட்டர் நிலத்தை விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய திட்டமானது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மேலதிகமாக 259,464 சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றி, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பான நிலங்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கை கொண்டுள்ளது.

இதன்மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 7,424 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

-tw