கொழும்பில் மனித உடற்பாக கடத்தலில் ஈடுபடும் நபர் கைது

கொழும்பு ராஜகிரியவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் மனித உறுப்புகள் சத்திரசிகிச்சை மூலம் கடத்தலில் ஈடுபட்ட பிரதான தரகராக செயற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ், காஜிமாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் பலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொரளை பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகம் மாற்று மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

 

-tw