காலாவதியான அரிசி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி! ராகமை களஞ்சியசாலைக்கு சீல் வைப்பு

இலங்கையில் பிரபல அரிசி உற்பத்தி நிறுவனமொன்றில் காலாவதியான அரிசி பொதிகளை திகதி மாற்றி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த களஞ்சியாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ராகமையில் உள்ள பாரிய களஞ்சியசாலை ஒன்றுக்கே பொதுச்சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு இவ்வாறு சீல் வைத்துள்ளனர்.

காலாவதி திகதி மாற்றம்

காலாவதியான கீரி சம்பா அரிசிப் பொதிகளில் காலாவதி திகதியில் இருந்து மேலும் ஒரு வருட காலத்துக்கு திகதியிடப்பட்டு புதிய லேபிள் ஒட்டப்பட்டு நியூசிலாந்தின் சூப்பர் மார்க்கட் ஒன்றுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படும் விடயம் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையில் அவ்வாறு மோசடியான முறையில் திகதி மாற்றம் செய்யப்பட்ட 199 அரிசிப் பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து களஞ்சியசாலையை மூடி சீல் வைத்த அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 

 

 

-tw