ரபிசி முதல் வாரத்திற்கான பொருளாதார அமைச்சின் முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டுகிறார்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார அமைச்சரான முகமட் ரபிசி ரம்லி இன்று முதல் வாரத்தில் தான் தலைமை வகிக்கும் அமைச்சகத்திற்கான பல முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டினார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான இதயமாகவும், தனது அணியாகவும் இருக்கும் பொருளாதார அமைச்சின் அனைத்து உயர் அதிகாரிகளையும்  அறிந்துகொள்வது தனக்கு மிக முக்கியமான ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

ட்விட்டரில் ஒரு ட்வீட் மூலம், ரபிசி (மேலே) இந்த முதல் வாரத்திற்கான தனது மற்ற முன்னுரிமை தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அதன் கணிப்புகளை ஆழமாக ஆராய்வதாகும் என்றார்.

கூடுதலாக, உயர் தாக்கத் திட்டங்களை விரைவாக ஏற்பாடு செய்வதாகவும், ஆறு மாதங்களுக்கு அமைச்சகத்தின் திட்டமிடலையும் ஏற்பாடு செய்வதாக அவர் மேலும் கூறினார்.