இலங்கை முழுவதும் மிகவும் குளிரான காலநிலை

இங்கையில் ஒரு தசாப்தத்தின் பின்னர் நாட்டின் வளிமண்டலத்தில், அதிகளவான தூசுத் துகள்கள் நேற்றைய தினம் படிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய சுற்றாடல் அதிகாரச் சபை இதனை தெரிவித்துள்ளது.

மெண்டௌஸ் சூறாவளியினால் இந்தியாவில் இருந்து தூசுத் துணிக்கைகள் அதிகளவில் நாட்டில் சூழ்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சஞ்ஜய ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில், நாடளாவிய ரீதியில், அதிக குளிருடனான வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்று முதல் குறைவடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

-ift