2022 ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 2,51,151 பேர் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஆரம்பமாவதற்கு முன் வருடாந்தம் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையில் இது பாரிய அதிகரிப்பென்று மத்திய வங்கி கூறுகிறது.
மத்திய வங்கியின் அறிவிப்பு
இதேவேளை, 2022 ஒக்டோபர் மாதத்தில் 28,473 பேர் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 11,399 திறனற்ற தொழிலாளர்கள், 7,887 பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 6,165 பேர் உள்நாட்டு சேவைகளுக்காக சென்றுள்ளனர்.
குவியும் டொலர்கள்
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பதிவாகியுள்ள வெளிநாட்டுப் பணம் 355 மில்லியன் டொலர்களென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2022 ஜனவரி-ஒக்டோபர் இல் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 2,929 மில்லியன் டொலர்கள். 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில், இந்த மதிப்பு 4,895 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.
-ibc