சீன அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து சிறிலங்கா தொடர்பில் ஐஎம்எஃப் முக்கிய அறிவிப்பு!

இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்களை சீனா விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் சீனாவிற்கு விடுத்துள்ளது.

சீனா அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் கோரிக்கை

மேலும் அவர், சீனாவுடன் ஜி20 பொதுக்கட்டமைப்பு சம்பந்தமான சில முக்கிய விடயங்கள் குறித்து விசேட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சீனா, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்களை விரைவுபடுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் சீன அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்போதுதான் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்கள் இலங்கைக்கு நிதியுதவியளிக்க முற்சிகளை மேற்கொள்ளும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

-ibc