காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தால் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம்

மனித உரிமைககள் மறுக்கப்பட்ட மண்ணில் மீண்டும் ஒரு மனித உரிமைகள் தினத்தை கடந்து செல்கின்றோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தால் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளும், தனது மக்கள் அந்த மனித உரிமைகளை அனுபவிக்கும் படியாக நடந்து கொள்ளும் நாடுகளும் அனுஷ்டிப்பதே பொருத்தமானதாகும்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம், இலங்கை ஆயுத படையினரால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் அரசாங்கத்தினதும், அரச படைகளினதும் பொய் வாக்குறுதிகளை நம்பி இறுதி யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் சரணடைந்த, கையளிக்கப்பட்ட, எமது உறவுகளைத் தேடி போராடி வருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

-tw