கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான இளம் பெண்களின் துயர அனுபவம்

கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானார்கள் என்பது குறித்து பாடசாலை மாணவி ஒருவர் உள்ளிட்ட இரு யுவதிகள் தங்களின் துயர அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் யுவதி ஒருவர் எவ்வாறு ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானார் என்பது குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் 22 வயதுடைய இளம் பெண் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானா சோகமான கதை இதுவாகும்.

“நண்பரோடு பார்ட்டிக்கு போயிருந்தேன், இப்போது அதுக்கு ஏறக்குறைய அடிமையாகிவிட்டேன், எனக்கும் இதிலிருந்து விடுபட வேண்டும், இவ்ளோ பெரிய விஷயமா இருக்கும் என்று நினைக்கவில்லை.

இதனை யாரும் முயற்சித்து பார்க்க வேண்டாம், என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இரவு விடுதிகளில் ஐஸ் போதைப்பொருள் வேகமாக பரவி வருவதாக இரவு விடுதி ஒன்றில் பணிபுரியும் இளம் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்

“நான் விடுதி ஒன்றில் வேலை பார்த்தேன்.. இதை பயன்படுத்தி உள்ளே வேலை செய்பவர்களை பார்த்தேன், இரண்டு வருடத்துக்கு முன்னால் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதுக்கு அடிமையாகிவிட்டேன், ஒரு நண்பர்தான் முதலில் கொடுத்தார்.

உபயோகிக்கும் போது சாப்பிட முடியாது.. தூக்கம் வரும். உடல் பலவீனமாகிறது. வாய் வலிக்கின்றது, நாக்கு பிளக்கிறது. தொண்டையில் சளி கட்டுகிறது, விடுதியில் நிறைய பெண்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் இதற்கு அடிமையாகிவிடக்கூடாது, இதனால் எம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது, என்ன செய்வது என்று தெரியவில்லை, இலங்கையில் இது ஒழிய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐஸ் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட மக்களின் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் வெளிநாட்டு ஊடகங்கள் சில புகைப்படங்களுடன் அறிக்கை ஒன்றை முன்வைத்திருந்தன.

 

 

 

-ift