இலங்கையில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் தற்போது போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக போலி நாணயத்தாள்களின் புழக்கத்தை தடுப்பது மற்றும் பொதுமக்களின் கைகளில் புழங்குவதை தடுப்பது தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பண்டிகை நாட்களின் மக்களின் பாதுகாப்பிற்காகவும், சந்தேகநபர்களை கைது செய்யவும் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வேலை திட்டத்திற்காக சீருடை அணிந்த பொலிஸாருக்கு மேலதிகமாக, சிவில் உடையில் பொலிஸார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கடைகள் மற்றும் பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொள்ளையர்கள் மற்றும் வாகன திருடர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலும் இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெறும் ஒவ்வொரு தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வெளி மாவட்டங்களிலுள்ள அதிகாரிகள் மேல் மாகாணத்திற்கு வரவழைக்கப்பட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

-ibc