இலங்கையின் 75 வது சுதந்திரதினக் கொண்டாட்டம் யாழ்ப்பாணத்தில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் தேசிய ரீதியிலான 75 ஆவது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

75 ஆவது சுதந்திரதின கொண்டாட்டம்

அதற்கு பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாச்சார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயல்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கான ஆரம்ப கலந்தரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கலாச்சார மத்திய நிலைத்தினுடைய ஒரு இணைப்பு முகாமைத்துவ குழுவில் அங்கம் வகிக்கும் ஆளுநர் மற்றும் இந்திய துணை தூதுவரத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ்.மாநகர சபையின் அதிகாரிகள் மத்திய கலாச்சார அமைச்சுடன் இணைந்ததாக கலாச்சார மத்திய நிலையத்தில் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பங்கேற்பு

அத்துடன் சுதந்திரதின நிகழ்வு முக்கியமாக மாகாண மட்டத்திலே இணைப்பான ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்வதற்கு ஏற்ற வாறாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதி கலந்துக்கொள்ள உள்ளதால் பெரியளவில் இடம்பெற்றவுள்ளதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 

 

-tw