இலங்கையின் புதிய சிக்கன நடவடிக்கை – இனி அரச வேலைகள் இல்லை

இலங்கை ஒரு புதிய சிக்கன நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது, இதன்படி, இனிமேல் அரசாங்க ஆட்சேர்ப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை புதிய வரிகள் மற்றும் மின் கட்டண அதிகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏனெனில் அதிகாரிகள் சர்வதேச நாயண நிதியத்திடமத் இருந்து பிணை எடுப்பைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்று AFP செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

இலங்கை அதன் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்ததான கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டு கடனை செலுத்தத் தவறிய பின்னர் புதிய மாற்றங்களைக் முன்னெடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் 1.5 மில்லியன் அரசாங்க வேலைகளை குறைக்குமாறும், வரிகளை உயர்த்தி, அரச நிறுவனங்களை வலுப்படுத்துமாறும் முன்னதாகக் கேட்டிருந்தது.

இதன்படி, டிசம்பரில், 20,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர், இது முந்தைய ஆண்டுகளை விட எட்டு மடங்கு அதிகமாகும் என்று பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓய்வு பெறும் வயதை 65 இல் இருந்து 60 ஆகக் குறைக்கும் தீர்மானத்தை கொண்டு வந்ததை அடுத்து பெருமளவான அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.

அரச வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு தனிநபர் வருமானம் மற்றும் பெருநிறுவன வரிகள் ஏறக்குறைய இரட்டிப்பாக்கப்பட்டது, அதே நேரத்தில் மின்சார விலை 65 சதவீதம் உயர்ந்துள்ளது என்று AFP தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜூலை மாதம் பதவி விலகினார்.

“எங்கள் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. நாம் முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் கடன் சுமையை குறைக்க வேண்டும்” என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, புதிய நடவடிக்கைகளுக்கு மத்தியில் அத்தியாவசியமற்ற மூலதனச் செலவினங்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

-ift