இலங்கையின் நிதித்துறையினை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் வெற்றிகரமான சிறிந்த புதிய பாதையினை அமைக்க முடியுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் நிலையான வளர்ச்சிக்கான தெற்காசிய பாதை தொடர்பிலான கலந்துரையாடல் இந்தியாவில் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் நிதித்துறையை டிஜிட்டல் மயமாக்க முயற்சிக்கின்றோம். அதற்கு புதிய விதிமுறைகள் கூட தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இது அனைத்து நிதி பரிவர்த்தனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது எனவும், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனுக்கு இது மிகவும் முக்கியமானது எனவும் கூறினார்.
-ift