தேர்தல் நடத்தினால் அது ஓர் உலக சாதனையேயாகும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உலகில் மிகப் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் அரசாங்கம் பணம் அச்சிட்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தியது என்ற உலக சாதனையை தேர்தலை நடாத்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டில் 2500 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டதாகவும் அதனை மறைக்கத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த அச்சிடப்பட்ட பணம், அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள்
அதனால் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு முதலாம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரையில் 80.5 பில்லியன் ரூபா செலவு செய்ய நேரிட்டுள்ளதாகவும் அதில் 26 பில்லியன் ரூபா மட்டுமே வருமானமாக கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய 54 பில்லியன் ரூபா பணத்தை தேட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியக் கொடுப்பனவு உள்ளிட்ட கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய செலவுகளே இவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-tw