தமிழர் தாயக பகுதியில் தேசிய தைப்பொங்கல் விழா – தலைமை தாங்கும் அதிபர் ரணில்

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் சிவன் கோயிலில் இடம்பெறவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழா இடம்பெற்றுள்ளது.

எனவே குறித்த ஆண்டு கொண்டாடப்பட்ட தேசிய தைப்பொங்கல் விழாவில் அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை.

8 ஆண்டுகளின் பின்

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலேயே குறித்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் 8 ஆண்டுகளின் பின் மீண்டும் யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிபர் ரணில் விக்ரமசிங்க பொங்கல் பானையில் அரிசியை போட்ட பின்னர், அங்கிருந்து துர்க்கா மணிமண்டபத்துக்கு மங்கல இசை முழங்க அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கலந்து கொள்வதற்கான அழைப்பு அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

-ibc