சீனப் புத்தாண்டைக் கொண்டாடச் சொந்த ஊருக்குத் திரும்பிய மில்லியன் கணக்கான சீன மக்கள்

சீனாவில் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

கிருமிப்பரவல் அச்சம் நீடிக்கும் வேளையில், இதுவரை 480 மில்லியன் முறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒப்புநோக்க சென்ற ஆண்டை விட, அது 50 விழுக்காடு அதிகம். சீனா கிருமிப்பரவலை முற்றாகத் துடைத்தொழிப்பதற்காகப் பின்பற்றிய கடுமையான கட்டுப்பாடுகளை அகற்றியதால் மக்கள் பெருமளவில் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இந்த மாதம் மட்டும் இரண்டு பில்லியன் பயணங்கள் இடம்பெறக்கூடும். ஆனால், மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் கிராமப்புறங்களில் கிருமிப்பரவல் அதிகரிக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

இந்நிலையில், சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள கிராமங்களில் நோய்ப்பரவல் தணியத் தொடங்கியிருக்கிறது.

 

 

-smc