இலங்கையில் சூடு பிடிக்கும் தேர்தல் களம் – வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்கு அமைய இந்த வாக்குச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட உள்ளன.

340 உள்ளூராட்சி சபைகளுக்காகன தேர்தல் நடத்தப்பட உள்ளதுடன் அவற்றுக்கு தனித்தனியாக வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட உள்ளன.

தேர்தல் ஆணைக்குழு

வாக்குச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டு அவை அச்சிடும் பணிகளுக்காக விரைவில் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இதனிடையே இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் பிரதிநிதிகள் எதிர்வரும் செவ்வாய் கிழமை முற்பகல் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட உள்ளனர்.

தேர்தல் செயற்பாடுகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழு இதனை மேற்கொள்ள உள்ளது.

 

 

-ibc