உக்ரேனுக்கு உதவும் புதிய ஒப்பந்தம்- பிரான்ஸ், ஆஸ்திரேலியா அறிவிப்பு

பிரான்சும் ஆஸ்திரேலியாவும் இணைந்து ஆயிரக்கணக்கான பீரங்கிக் குண்டுகளைத்  தயாரித்து உக்ரேனுக்கு அனுப்பத் திட்டமிடுவதாக அறிவித்துள்ளன.

அவை 155 மில்லிமீட்டர் நீளமுள்ள வெடிகுண்டுகள். பாரிசில் சந்திப்பு நடத்திய இருநாட்டுத் தற்காப்பு அமைச்சர்கள் அந்தக் கூட்டு அறிவிப்பை விடுத்தனர். அடுத்த 2 மாதங்களுக்குள் அவற்றைக் கீவுக்கு அனுப்ப பிரான்சும் ஆஸ்திரேலியாவும் திட்டமிடுகின்றன.

பீரங்கிக் குண்டுகளை அனுப்பும் ஒப்பந்தம் சிறியதாக இருந்தாலும் அது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஈராண்டுகளுக்கு முன்பு, பிரான்சிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதாகக் கூறியிருந்த ஆஸ்திரேலியா அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை.

அது இரு நாடுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தியது.

 

 

-sm