சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
தங்களது கச்சா எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் விலை வரம்பு நிா்ணயித்துள்ளதற்குப் பதிலடியாக, எண்ணெய் உற்பத்தியை அடுத்த மாதத்திலிருந்து குறைக்கவிருப்பதாக ரஷியா கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
விலை வரம்பை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அமல்படுத்தும் நாடுகளுக்கு இனி எண்ணெய் ஏற்றுமதி செய்யப்போவதில்லை; அதற்கேற்ப, அடுத்த மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினமும் 5 லட்சம் பேரல்களைக் குறைக்கப்படும் என ரஷியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், ரஷிய எண்ணெயை பெரிதும் சாா்ந்திருக்கும் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-dt