கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள்: பின்னணியில் சிக்கிய ஐக்கிய தேசியக் கட்சி

தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு எம்மை இனவாதிகளாக சித்திரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தான் 1983 ஆம் ஆண்டு ஜூலை காலப்பகுதியில் தமிழ் மக்களை படுகொலை செய்து அந்த பழியை மக்கள் மீது சுமத்தியது என 43 ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், நாட்டில் இனவாத முரண்பாட்டையும், ஆயுத போராட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியே தோற்றுவித்தது எனக் குற்றம் சாட்டிய சம்பிக்க ரணவக்க, பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்டதை நாட்டு மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியதை அதிபர் ரணிலும் நன்கறிவார் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐனநாயக போராட்டத்தை சர்வாதிகாரமாக அடக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் நாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு எதிராக அதிகாரம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரதான கொள்கை உண்டு, ஜனநாயகத்திற்கு எதிராக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதே ஆகும், சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்புக் கூற வேண்டும்.

தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக தங்களைக்காட்டிக்கொண்டு எம்மை இனவாதிகளாக சித்திரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தான் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களை படுகொலை செய்து அந்த பழியை மக்கள் மீதும் ஜே.வி.பி மீதும் சுமத்தியது.

நாட்டில் இனவாத முரண்பாட்டையும்,ஆயுத் போராட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியே தோற்றுவித்தது. நாட்டில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியஅப்போதைய ஐ.தே .க.தலைவரான முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன பாரிய எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பதவி விலகினார்.

அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிபர் ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் வன்முறைகள், கலவரங்கள் தீவிரமடைந்தன.

மக்கள் மீது சர்வாதிகாரம்

பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்டதை நாட்டு மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்கள். இந்த சம்பவங்களை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நன்கு அறிவார்கள்.

நிறைவேற்றுத்துறை ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படும் போது அதன் விளைவு பாரதூரமாக அமையும் என்பதற்கு வரலாற்றில் பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாக உள்ளன.

ஜனநாயக உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விட்டால் அதன் விளைவு பாரதூரமாக அமையும் என்பதை அதிபர ரணில் விக்ரமசிங்க மறந்து விடக் கூடாது என்றார்.

 

-ib