சீனாவை தொடர்ந்து இலங்கையில் கால் பதிக்கிறது ரஷ்யா

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான யோசனையுடன் ரஷ்யா புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சமர்ப்பித்துள்ளது.

இலங்கை அணுசக்தி நிலையத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா இரண்டு அரசுகளுக்கு இடையேயான வேலைத்திட்டமாகவே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வழிகாட்டல் குழு

இந்நிலையில், ரஷ்யா முன்வைத்த பிரேரணையின் அடிப்படையில் இந்த விடயத்தை ஆய்வு செய்ய வழிகாட்டல் குழு மற்றும் 9 செயற்குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த மின் உற்பத்தி நிலையம் நாட்டின் எல்லையில் கட்டப்படுமா அல்லது கப்பலில் நிறுவப்பட்டு கடலில் இயக்கப்படுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

 

 

-ib