இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் இலங்கையில் நேரடியாக தமது பணத்தை பயன்படுத்த முடியும்
இதன்போது இந்திய நாணயத்தை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நாணயமாக மாற்ற வேண்டியது அவசியமானது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இந்தியர்கள் இலங்கையில் நேரடியாக தமது பணத்தை பயன்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை எடுத்தால் இலங்கையர்கள் வேறு நாணயத்தை சார்ந்திருக்காமல் செயற்பட முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய கடன் தொகை இம்மாதம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் இலங்கையில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-tw