நியூசிலாந்திற்கு தப்பி செல்ல முயற்சித்த 6 இலங்கையர்கள் கைது

தமிழ்நாட்டில் உள்ள 3 அகதி முகாம்களில் தங்கியிருந்த ஆறு இலங்கையர்கள் நியூசிலாந்திற்கு தப்பி செல்ல முயற்சித்த நிலையில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 6 பேரும் நியூசிலாந்திற்கு ஒரு படகு வழியாக தப்பி செல்ல முயன்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குற்ற விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்

தமிழ் நாட்டில் உள்ள கியூ பிரிவின் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 6 பேரும் தமிழ்நாட்டின் படகு உரிமையாளரிடம் முன்கூட்டியே பணம் செலுத்தி படகு ஒன்றை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றிலேயே இவர்கள் தங்கியிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

-tw