எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் வாழ்ந்தவர் மீட்பு

நான்கு வருடங்கள் காட்டு பகுதிக்குள் தனிமையில் வாழ்ந்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலை காட்டுப் பகுதியிலேயே இவர் கடந்த நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.

குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, மனநலம் குன்றிய நிலையிலேயே அவர் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவர் என்.நகுலேஸ், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

 

 

 

-bbc