இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்கு மேலும் நான்கு நாடுகள் ஆதரவளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா, பாரிஸ் கிளப் ஆகியன ஏற்கனவே தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தன.
கடன் மறுசீரமைப்பு
இந்த நிலையில், இலங்கையின் நெருக்கடியான தருணத்தில் சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகள் கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கியுள்ளன.
இதற்காக அமைச்சர் அலி சப்ரி குறித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உங்கள் நட்பையும் ஆதரவையும் இலங்கையின் தலைமுறைகள் எப்போதும் மதிக்கும் என அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
-ib

























