இலங்கையின் கடன் தொடர்பிலான பேச்சுவார்த்தையை கையிலெடுத்த முக்கிய நாடுகள்

ஜப்பான், இந்தியா, மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்காக இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை அறிவித்துள்ளன.

இந்த நடவடிக்கை நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்களின் கடன் துயரங்களைத் தீர்ப்பதற்கான ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று அந்த நாடுகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

எனினும் இலங்கையின் மிகப் பெரிய இருதரப்புக் கடன் வழங்குநரான சீனா – இந்த ஆண்டு ஜி7 அமைப்பின் தலைமை நாடான ஜப்பானால் ஆரம்பிக்கப்பட்ட முயற்சியில் இணையுமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது என்று ரோயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ஜப்பான் வழிகளைத் தேடி வருகிறது

இந்தநிலையில், நேற்றைய தினம் (13.04.2023) வொஷிங்டனில் இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றிய ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி, இதுபோன்ற பரந்த அடிப்படையிலான கடன் அளிப்பவர்களின் குழுவைச் சேகரிக்கும் இந்த பேச்சுவார்த்தை செயல்முறையை ஆரம்பிப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழு அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் திறந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் சீர்திருத்தங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதற்கும் ஜப்பான் வழிகளைத் தேடி வருகிறது என்றும் ஜப்பானிய அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை மீதான கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஆரம்பித்து வைத்து காணொளியின் ஊடாக உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதில் இருதரப்பு கடன் வழங்கும் நாடுகளின் விரைவான முன்னேற்றத்தை இந்த முயற்சி குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ்

ஒப்பிடக்கூடிய மறுசீரமைப்பு கொள்கைகளின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் அனைத்து கடன் வழங்கும் நாடுகளுடனும் மற்ற பங்குதாரர்களுடனும் தொடர்ந்து இணைந்து செயற்பட இலங்கை உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் தலைமையிலான கடன் வழங்குநர்; தளத்தில் பங்கேற்குமாறு இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் கடன் மறுசீரமைப்பை விரைவுபடுத்துவதற்கு, இலங்கைக்கும் அதன் அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பு முக்கியமானது என்று இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்வின்போது கூறியுள்ளார்.

கடன் வழங்குநர்களும் பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, இலங்கை, நெருக்கடியிலிருந்து விரைவாக மீள்வதற்கு விரைவான கடனைத் தீர்ப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து இருதரப்புக் கடன் வழங்குநர்களும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று முதல் மதிப்பாய்வுக்கு முன்னதாக அவற்றைத் தீர்த்துவைப்பார்கள்; என்று நம்பிக்கை குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சின் திறைசேரி இயக்குநர் இம்மானுவேல் மௌலின், தமது குழுவானது முதல் சுற்று பேச்சுவார்த்தையைக் கூடிய விரைவில் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

-tw