இலங்கையில் சீர்திருத்த வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என உலக வங்கி அழைப்பு

இலங்கையில் சீர்திருத்தங்கள் வெற்றிபெற வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என உலக வங்கி அழைப்பு விடுத்துள்ளது.

உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் வோஷிங்டனில் ஆக்கபூர்வமான சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலக வங்கி குழு

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் நிதி மற்றும் பொருளாதார நிர்வாக சீர்திருத்தங்களில் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முழு மீட்பு முயற்சிகள் வளர்ச்சியடைய வேண்டும். அவற்றை உலக வங்கி குழு ஆதரிக்கும் என்றும் உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் தெரிவித்தார்.

சமூக பாதுகாப்பு சீர்திருத்தம்

மேலும், பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட முக்கியமான  சமூகப் பாதுகாப்பு சீர்திருத்தம் உட்பட, சீர்திருத்தங்கள் வெற்றிபெற அதிகரித்த வெளிப்படைத்தன்மை முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் கலந்து கொண்டுள்ளார்.

 

 

 

-tw