உக்ரைன் – ரஷியா போர் உள்பட பல்வேறு அமெரிக்க ராணுவ ரகசியங்களை கசியவிட்ட வீரர்

அமெரிக்க ராணுவ ரகசியங்களை கசியவிட்ட 21 வயது விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் கடந்த சில மாதங்களாக இணையதளத்தில் கசிந்தது. 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்கள் கேமிங் இணையதளத்தில் கசிந்தது.

இந்த ரகசிய ஆவணங்களில் உக்ரைன் – ரஷியா போர் விவரம் உள்பட பல்வேறு ரகசிய ஆவணங்கள் இணையதளத்தில் கசிந்தன. இந்த சம்பவம் அமெரிக்க பாதுகாப்புத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ராணுவ ரகசியங்களை கசியவிட்டது யார்? என்று பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ராணுவ ரகசியங்களை இணையதளத்தில் கசியவிட்ட விமானப்படை வீரர் ஜேக் டெக்சாரியா என்ற 21 வயதான விமானப்படை வீரரை பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

-dt