முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நேர்ந்த நிலையே தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் ஏற்படும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றத் தவறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச வீடு செல்ல நேரிட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய ஆட்சியாளர்களும் கோட்டாபயவின் வழியையே பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சியாளர்களும் வீடு செல்ல நேரிடும்
இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களையோ அல்லது உண்மைகளையோ மூடி மறைக்க முயற்சித்தால் தற்போதைய ஆட்சியாளர்களும் வீடு செல்ல நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரியொருவர் இன்னமும் பதவியில் நீடித்திருப்பதாகவும் அவ்வாறான அரசாங்கத்துடன் தொடர்பாட முடியாது எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
-tw