மனித சங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு

இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏப்ரல் 21ஆம் திகதி மனித சங்கிலியை கட்டியெழுப்பவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு எதிரான இந்த மனித சங்கிலி போராட்டத்தில் இணைவதற்கு, தமது பிரதேச தேவாலயங்களில் ஒன்று கூடுமாறு அனைத்து பொதுமக்களையும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

இன மத மற்றும் அரசியல் கட்சி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து பொது மக்களும் இதில் இணைய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

மனித சங்கிலி போராட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும், சுதந்திரத்தின் கரங்களை வலுப்படுத்தவும் இலங்கையின் தலைவர்களை கோரும் வகையில் இந்த மனித சங்கிலி போராட்டம் அமையும் என்று கர்தினால் தெரிவித்துள்ளார்.

எனவே ஏப்ரல் 21ஆம் திகதி காலை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இருந்து நீர்கொழும்பு, கடுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் வரையில் அமைதி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

 

 

-tw